ஆபரண விற்பனையாளர்கள் சங்கம் தகவல்
தங்கம் இறக்குமதி, அக்டோபர் மாதத்தில், இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என இந்திய தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி தெரிவித்தார். 80 டன்னாக இருக்கும்“அடுத்த மாதம் தங்கம் இறக்குமதி 80 டன்னாக இருக்கும். சென்ற ஆண்டின் இதே மாதத்தில் தங்கம் இறக்குமதி 35-40 டன்னாக இருந்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு தங்கம் இறக்குமதி அக்டோபர் மாதத்தில் அதிகரிக்கும். ஆனால், தங்கத்தின் முதலீட்டு தேவை குறையும்” என பிரித்விராஜ் கூறினார்.சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு தேவையற்ற இறக்குமதிகள்தான் முக்கிய காரணமாக உள்ளன. நம் நாட்டில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, தங்கம் இறக்குமதி கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இறக்குமதி வரியை 10 சதவீதமாக உயர்த்தியது. மேலும், ரிசர்வ் வங்கி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை கட்டாயம் மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என நிபந்தனையை விதித்தது.மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் சென்ற ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி குறைந்தது. எனினும், தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய பொருள்களின் இறக்குமதிக்கான அடிப்படை விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது.கல்யாண சீசன்அக்டோபர் மாதம் பண்டிகை காலமாக இருப்பதால் முன்னிட்டு தங்கம் இறக்குமதி தற்போதைய மாதாந்திர சராசரி அளவை காட்டிலும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிசையாக வரும் பண்டிகைகளுடன், கல்யாண சீசனும் இணைவதால் தங்கத்திற்கான தேவைப்பாடு பெருமளவு அதிகரிக்கும் என இத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply