கண்காட்சி & கருத்தரங்கு

அக்ரி இண்டெக்ஸ் கண்காட்சி கோவையில் 18-இல் துவக்கம்

“அக்ரி இண்டெக்ஸ்’ எனப்படும் வேளாண் கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 18-ஆம் தேதி துவங்குகிறது.  இது தொடர்பாக கொடிசியா தலைவர் இ.கே. பொன்னுசாமி, அக்ரி இண்டெக்ஸ் தலைவர் ஜி.தேவராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

கோவை கொடிசியாவும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும் இணைந்து கொடிசியா வளாகத்தில் இக்கண்காட்சியை நடத்த உள்ளன. கொடிசியா வளாகத்தில் 14-ஆவது முறையாக அக்ரி இண்டெக்ஸ் கண்காட்சி நடைபெற உள்ளது. வரும் 18-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.

கண்காட்சியில் சுமார் 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மொத்தம் 238 அரங்குகள் அமைய உள்ளன. சூரியசக்தி பம்ப், துல்லிய பண்ணையம், பண்ணை இயந்திரமயமாக்கல், உயிரி தொழில்நுட்பம், இயற்கை வேளாண்மை, கோழிப் பண்ணைகள், தானியங்கி முறை, மதிப்புக் கூட்டல், அறுவடை பின்சார் தொழில்நுட்பம், வேளாண் சந்தைப்படுத்துதல், கால்நடை பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பான அரங்குகள் அமைய உள்ளன. கண்காட்சி நடைபெறும் நாள்களில் தினமும் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.

 

 

Leave a Reply