வணிகச் செய்திகள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் சில்லறை வர்த்தக துறை 16% வளர்ச்சி அடையும்

இந்திய சில்லறை வர்த்தகத் துறை, அடுத்த மூன்று ஆண்டுகளில், 16 சதவீத வளர்ச்சி அடையும் என இமேஜ் குழுமத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.ஆயத்த ஆடைகள்ஆய்வறிக்கை மேலும் கூறுவதாவது-தற்போது சில்லறை வர்த்தகத்துறையின் சந்தை மதிப்பு ரூ.38,93,425 கோடியாக உள்ளது. 2017-ல் இது ரூ.61,56,333 கோடியாக உயரும். ஆயத்த ஆடைகள் சில்லறை விற்பனை இப்போது ரூ.3.24 லட்சம் கோடியாக உள்ளது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில் 21 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.5.65 லட்சம் கோடியாக அதிகரிக்கும். சில்லறை வர்த்தக துறையில் நவீன சில்லறை வர்த்தகம் 43.1 சதவீதமாக உயரும்.இதே காலத்தில் உணவுப் பொருள்கள் சில்லறை விற்பனை மதிப்பு ரூ.2.04 லட்சம் கோடியிலிருந்து 24 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.3.80 லட்சம் கோடியாக உயரும். இதில், நவீன சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி 31 சதவீதமாக இருக்கும்.சில்லறை வர்த்தக மையங்களின் எண்ணிக்கை இன்றைய அளவைவிட 35 சதவீதம் அதிகரிக்கும். சில்லறை வர்த்தக மையம் ஒன்றின் சராசரி வருவாய் பரப்பளவு மற்றும் வருவாய் 16 சதவீதம் அதிகரிக்கும். ஆபரணங்கள் சில்லறை வர்த்தகம் ரூ.2.01 லட்சம் கோடியிலிருந்து 26 சதவீதம் அதிகரித்து ரூ.3.83 லட்சம் கோடியாக உயரும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஆன்லைன் வர்த்தகம்தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்லைன் சில்லறை விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போதைய மதிப்பீடுகளின்படி இப்பிரிவு ஆண்டுக்கு 50 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. 2007-08-ஆம் நிதி ஆண்டில் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் ரூ.1,500 கோடி அளவிற்கு இருந்தது. 2012-13-ஆம் ஆண்டில் அது ரூ.13,900 கோடியை தாண்டியது. 2016 மார்ச் மாதத்திற்குள் இப்பிரிவின் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply