வணிகச் செய்திகள்

அடுத்த 11 ஆண்டுகளில் ஆப்பிரிக்கா வாயிலான வருவாய் 4 மடங்கு உயரும்

2025-ஆம் ஆண்டிற்குள் ஆப்பிரிக்க வர்த்தகம் வாயிலாக இந்தியா ஈட்டும் வருவாய் நான்கு மடங்கு உயர்ந்து 16,000 கோடி டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், விவசாயம், அடிப்படை கட்டமைப்பு, மருந்து மற்றும் நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் அந்நாட்டில் கால் பதித்து வருகின்றன. இப்பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தி விரிவு படுத்தினால் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என மெக்கன்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் இந்திய சில்லறை நிறுவனங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. ஆயத்த ஆடைகள், நவநாகரிக பொருள்கள் போன்றவற்றிக்கான தேவைப்பாடு அதிகமாக காணப்படுகிறது என டிரெண்ட் நிறுவனத்தின் துணை தலைவர் நோயல் டாட்டா இந்திய தொழிலக கூட்டமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியபோது இதனை தெரிவித்தார்.

இந்திய நிறுவனங்கள் ஆப்பிரிக்காவின் ஐ.டி. சேவையில் 7 சதவீதமும், நுகர்பொருள் துறையில் 5 சதவீதமும், மின்துறையில் 10 சதவீதமும், விவசாயம் மற்றும் அது சார்ந்த பிரிவுகளில் 5 சதவீதம் வரை பங்களிப்பை பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அதிகளவில் ஆதாயம் அளித்ததில் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது.

 

நன்றி தினத்தந்தி

 

Incoming Search Terms : africa, revenue, india, foreign exchange,

 

Leave a Reply