வணிகச் செய்திகள்

அன்னியச் செலாவணி கையிருப்பு 315.77 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு

கடந்த ஜூன் 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 856.6 மில்லியன் டாலர்கள் அதிகரித்து, 315.77 பில்லியன் (1 பில்லியன் டாலர்=100 கோடி டாலர்) டாலர்களாக இருந்தது.

அதற்கு முந்தைய வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு 1.385 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, 314.922 பில்லியன் டாலர்களாக இருந்தது. அனைத்து கையிருப்புகளையும் கணக்கில்கொண்டு பார்க்கையில், ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட காலத்தில், அன்னிய கரன்சி மதிப்பு மிகவும் அதிகரித்திருந்தது என இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்த வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது 850.9 மில்லியன் டாலர்கள் அதிகரித்து, 288.812 பில்லியன் டாலர்களாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னிய கரன்சி மதிப்பானது அமெரிக்க டாலரில் கணக்கிடப்படுகிறது. இவை இதர நாடுகளின் கரன்சிகளின் மதிப்பு உயர்வு, குறைவு ஆகியவற்றைக் கணக்கிட்டு, மதிப்பிடப்படுகிறது.

ஜூன் 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தங்கம் கையிருப்பு எவ்வித மாற்றமும் இல்லாமல், 20.790 பில்லியன் டாலர்களாக இருந்தது. எஸ்.டி.ஆர். 4 மில்லியன் டாலர்கள் அதிகரித்து, 4.460 பில்லியன் டாலர்களாக இருந்தது. மேலும், பன்னாட்டு நிதியத்தில் (ஐ.எம்.எப்.) இந்தியாவின் கையிருப்பு 1.7 மில்லியன் டாலர்கள் அதிகரித்து, 1.716 பில்லியன் டாலர்களாக இருந்தது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply