வணிகச் செய்திகள்

அன்னிய செலாவணி இருப்பில் ஏற்றம் : 29000 கோடி டாலராக உயர்வு

இந்திய அந்நிய செலவாணி கையிருப்பின் மதிப்பு இந்த வாரம் 17 கோடியே 78 லட்சம் டாலர் உயர்ந்து 29 ஆயிரத்து 328 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

முந்தைய வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பின் மதிப்பு 20 கோடியே 59 லட்சம் குறைந்து 29 ஆயிரத்து 311 கோடி டாலராக காணப்பட்டது. இது ஆரோக்கியமான உயர்வு என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தில் தங்க கையிருப்பு மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முன்பிருந்த ஆயிரத்து 972 கோடியாகவே அது உள்ளது என்றும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Leave a Reply