மீன் & கடல் பொருட்கள்

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இறாலுக்கு வரி விலக்கு

இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறாலுக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், இறால் ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, கடல்சார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவி இயக்குனர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க வர்த்தக துறை எடுத்துள்ள முடிவின் படி, இறாலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு இந்தியா உள்ளிட்ட, ஏழு நாடுகளுக்குப் பொருந்தும். அமெரிக்காவின் முடிவால், இந்திய இறால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு, பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் வரி விலக்கு முடிவு குறித்த சுற்றறிக்கைகள், கடல்சார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆணையம் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு, இந்திய வர்த்தகத் துறை விரைவில் அனுமப்பும். இவ்வாறு, விஜயகுமாரி கூறியுள்ளார்

Leave a Reply