பொறியியல் & மின்னணு சாதனங்கள்

அமெரிக்காவுக்கு பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி சரிவு

அமெரிக்காவுக்கான இந்தியாவின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் 10 சதவிகிதம் குறைந்தள்ளது.

இத்தகவலை இந்திய பொறியியல் வளர்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தவிர ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி சரிந்துள்ளதாக அந்தக் கவுன்சில கூறியுள்ளது.

பொருளாதார மந்த நிலைதான் இதற்கு காரணம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி சிறப்பாக இருந்தது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

Leave a Reply