வேளாண் பொருட்கள்

ஆகஸ்டு:பிப்ரவரியில் 78 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி

ஆகஸ்டு–பிப்ரவரி மாத காலத்தில் பருத்தி ஏற்றுமதி 5 சதவீதம் அதிகரித்து 78 லட்சம் பொதிகளாக உயர்ந்துள்ளது. எனினும் இனி வரும் மாதங்களில் சீனாவின் தேவையைப் பொறுத்தே இந்தியாவின் ஏற்றுமதி நிலவரம் இருக்கும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது. முந்தைய பருவத்தின் இதே காலத்தில் நாட்டின் பருத்தி ஏற்றுமதி 74 லட்சம் பொதிகளாக இருந்தது. ஒரு பொதி என்பது 170 கிலோ பருத்தியைக் கொண்டதாகும்.

பருத்தி ஏற்றுமதி பொதுவாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விறுவிறுப்பாக நடைபெறும். இந்த மாதங்களில் சீனா, வங்காளதேசம், வியட்நாம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதானமாக பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில், 2013 ஆகஸ்டு முதல் 2014 ஜூலை வரையிலான ஓர் ஆண்டு காலத்தில் நமது ஏற்றுமதி 1.02 கோடி பொதிகளை எட்டும் என அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது. முந்தைய ஆண்டில் 99 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply