வணிகத் தொழில்நுட்பம்

ஆன்லைன் வர்த்தகம் எப்.டி.ஐ விதி மீறல்

சில ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடு விதிகளை மீறியதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.  செல்போன் மற்றும் குறிப்பிட்ட சில பொருட்களை, ப்ளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் மூலம் தள்ளுபடியில் விற்பனை செய்தது. சமீபத்தில், இந்த விற்பனை அறிவிக்கப்பட்டு ஒரே நாளில் பொருட்களும் விற்கப்பட் டது. அன்றைய தினம் மட்டும் 600க்கு கோடிக்கு அந்த நிறுவனம் வியாபாரம் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்த அதிரடி விற்பனை வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியைஏற்படுத்தியது. இந்த ஆன்லைன் விற்பனை நியாயமற்றது என்று ஏராளமான வர்த்தகர்கள் புகார் தெரிவித்தனர். வணிகர்களின் கவலை குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

ப்ளிப்கார்ட்டின் தள்ளு படி விற்பனை குறித்து அமலாக்க துறை விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியானது. இதை அமலாக்க துறை மறுத்துள் ளது. இருப்பினும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) விதிமுறைகளை மீறியதாக கூறப்ப டும் புகார்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமலாக்க துறை அதிகாரிகள் சுட்டிகாட்டினர்.

Leave a Reply