கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதை விட, ஆன்-லைனில் ஷாப்பிங் செய்வது இப்போது பிரபலமாகிவிட்டது. குறிப்பாக, மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தொடங்கி ஆடைகள், காலணிகள் கூட ஆன்லைனில் வாங்குவோர் இருக்கின்றனர். இதில் தள்ளுபடி கூப்பன்கள், கிரெடிட் கார்டு மூலம் எளிய தவணை போன்றவை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன. இந்தியாவில் உள்ள சில்லரை விற்பனை கடைக ளோடு ஒப்பிடுகையில் ஆன்லைனில் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான் விற்பனையாகிறது. இருப்பினும், ஆன்லைன் மூலமான சில்லரை வர்த்தகம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது ஆன்லைன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.18,910 கோடி வர்த்தகம் நடக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் மூலமான வர்த்தகம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடியை எட்டும் என ஒரு அமைப்பு கணித்துள்ளது.
நன்றி தினகரன்
Leave a Reply