தங்கம் & ஆபரணங்கள்

ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதிரூ.2.46 லட்சம் கோடியை எட்டும்

நடப்பு 2014 – 15ம் நிதி­யாண்டில், நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, 2.46 லட்சம் கோடி ரூபாய் (4,400 கோடி டாலர்) என்ற அளவை எட்டும் என, நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மைப்பு (ஜி.ஜே.இ.பி.சி.,) தெரி­வித்­து உள்ளது.

மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு, ஆப­ரண துறையின் நலன் கருதி, தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பா­டு­களை தளர்த்தும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.மேலும், அமெ­ரிக்கா
உள்­ளிட்ட பல நாடு­களில், இந்­திய ஆப­ர­ணங்­க­ளுக்­கான தேவை, சிறப்­பான அளவில்
அதி­க­ரித்து வரு­கி­றது.இது போன்ற கார­ணங்­களால், நடப்பு நிதி­யாண்டில், நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, 4,400 கோடி டாலரை எட்டும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

சென்ற 2013 – 14ம் நிதி­யாண்டில், நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, 3,950 கோடி டால­ராக இருந்­தது.இதில், தங்க ஆப­ர­ணங் கள் ஏற்­று­மதி பங்­க­ளிப்பு, 786 கோடி டாலர் என்றஅள­விற்கே இருந்­தது.இதற்கு, மத்­திய அரசின் இறக்­கு­மதி கட்­டுப்­பா­டு­களால்,
உள்­நாட்டில் தங்­கத்­திற்கு பற்­றாக்­குறை ஏற்­பட்­ட தே, முக்­கிய கார­ண­மாகும்.