வர்த்தகக் கண்காட்சி & சந்தை

ஆயத்த ஆடைகள் 22-வது கண்காட்சி

கூர்கானில் உள்ள ஆடைகள் இல்லத்தில் தற்போது 22-வது கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது தயாரிப்புகளுடன் பங்கேற்றுள்ளன. கண்காட்சியை காணவும், ஆர்டர்கள் வழங்கவும் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதியாளர்கள் வந்துள்ளனர். “இந்திய ஆயத்த ஆடைகள் துறை நிலையான வளர்ச்சி கண்டு வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை நமது தயாரிப்புகள் உயர்ந்த இடத்தில் இருக்கின்றன” என்று ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பொது செயலாளர் புனித் குமார் தெரிவித்தார்.

இந்தியாவின் ஆடைகள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பங்கு 65 சதவீதமாக உள்ளது. அந்த நாடுகளில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் இனி வரும் காலங்களில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் நல்ல வளர்ச்சி காண முடியும் என இத்துறையினர் நம்புகின்றனர்.

நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 18 சதவீதம் உயர்ந்து 830 கோடி டாலரை எட்டியுள்ளது. இந்த துறையில் தற்போது 1.10 கோடி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.சவால்கள்இத்துறைக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மூலப்பொருள்கள் விலை அதிகரிப்பு, பயிற்சியும், திறமையும் வாய்ந்த தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை, கடுமையான தொழிலாளர் நல சட்டங்கள் போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டில் 1,400 கோடி டாலருக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, முந்தைய நிதி ஆண்டை (2010-11) விட 18 சதவீதம் அதிகமாகும். எனினும் 2012-13-ஆம் ஆண்டில் ஏற்றுமதி 6 சதவீதம் குறைந்து 1,290 கோடி டாலராக சரிந்தது.

Leave a Reply