வணிகத் தொழில்நுட்பம்

இணையதள இணைப்புகள் 35 கோடியாக அதிகரிக்கும்

இந்தியாவில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இணையதள இணைப்புகள் எண்ணிக்கை 35 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த இ-மார்க்கெட்டர் தெரிவித்துள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்து வருவது மற்றும் மொபைல் போன்களின் இணையதள பயன்பாடு அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில்…

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நம் நாட்டில் இணையதள இணைப்புகள் எண்ணிக்கை 28.38 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 2016-ஆம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் என இ-மார்க்கெட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் அமெரிக்காவில் 26.49 கோடி இணையதள இணைப்புகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இணையதள இணைப்புகள் எண்ணிக்கை 35 கோடியை எட்டி விடும். அதே ஆண்டில் அமெரிக்காவில் இணையதள இணைப்புகள் 27.41 கோடியாக இருக்கும். சர்வதேச அளவில் இன்று இணையதள இணைப்புகளை அதிகம் பெற்று சீனா முதலிடத்தில் உள்ளது. இனி வரும் ஆண்டுகளிலும் சீனா முதலிடத்தில் நீடிக்கும் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில், 2016-ஆம் ஆண்டில் 70 கோடியாகவும், 2018-ஆம் ஆண்டில் 77.70 கோடியாகவும் இணையதள இணைப்புகள் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 2015-ஆம் ஆண்டில் இணையதள இணைப்புகளின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டும் என்றும், உலகின் மொத்த மக்கள் தொகையில் இணையதளங்களை பயன்படுத்துவோரின் பங்கு 6.2 சதவீதம் அதிகரித்து 42.4 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் இ-மார்க்கெட்டர் தெரிவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டிற்குள் இணையதள இணைப்புகளின் எண்ணிக்கை 360 கோடியாக அதிகரிக்கும் என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.சீனா, அமெரிக்காஇ-மார்க்கெட்டர் கணிப்புகளின்படி 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் இணையதள பயன்படுத்துவோர் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்து 30.20 கோடியாக உயரும். சென்ற ஆண்டு இறுதியில் இது 21.30 கோடியாக இருந்தது. சீனாவில் 60 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன.

Leave a Reply