வணிகத் தொழில்நுட்பம்

இணையம் மூலம் நேரடி விற்பனையை தொடங்குகிறது பானாசோனிக்

நுகர்வோர் சாதனங்களைத் தயாரிக்கும் ஜப்பானிய நிறுவனமான பானாசோனிக், மின் வர்த்தகம் மூலம் தனது தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

தயாரிப்பாளர்களே தங்களது பொருள்களை மின் வணிகம் மூலம் நேரடியாக விற்பனை செய்ய மத்திய பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து பானாசோனிக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணீஷ் சர்மா கூறுகையில், “”இணையம் மூலம் பொருள்களை வாங்கும் வழக்கம் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, “பானாசோனிக் ஈ-ஸ்டோர்’ என்ற இணையதளச் சேவையை நிறுவனம் இம்மாதம் தொடங்கவுள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Reply