வங்கிக் கடன் & மான்யம்

இந்தியன் வங்கி: ஏற்றுமதி-இறக்குமதி வாடிக்கையாளர் சந்திப்பு

இந்தியன் வங்கியின் சார்பில் ஏற்றுமதி-இறக்குமதி வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

வங்கியின் செயல் இயக்குநர் பி.ராஜ்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப்பேசியது: ஏற்றுமதி-இறக்குமதி வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் இந்தியன் வங்கி முன்னோடியாக விளங்குகிறது. முந்திரி, தோல் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு தேவையான நிதியுதவிகள் அளிப்பதுடன் வர்த்தக மேம்பாடு குறித்த ஆலோசனைகள், புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை உடனுக்குடன் தெரியப்படுத்துகிறது.

ஏற்றுமதி-இறக்குமதி குறித்து வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மற்றும் அதிக தகவல்களை தெரியப்படுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என்றார் பி.ராஜ்குமார்.

ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு ஏற்றுமதி இறக்குமதியை மேம்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து துணைப் பொது மேலாளர் பிஸ்வஜித் சாரங்கி பேசினார். ஜே.பி.மோர்கன் சேஸ் வங்கியின் செயல் இயக்குநர் ஸஜ்ஜித் சினோய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply