வணிகச் செய்திகள்

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 135 கோடி டாலர் உயர்ந்தது

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, மார்ச் 21-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 135 கோடி டாலர் அதிகரித்து 29,864 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, மார்ச் 14-ந் தேதியுடன் முடிந்த முந்தைய வாரத்தில் 184 கோடி டாலர் அதிகரித்து 29,729 கோடி டாலராக இருந்தது.

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில், பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப்பட்டுள்ள நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

எனவே, டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட காலத்தில் அன்னிய செலாவணி மதிப்பு 158 கோடி டாலர் உயர்ந்து 27,140 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

எஸ்.டீ.ஆர். மதிப்பு 1.69 கோடி டாலர் குறைந்து 446 கோடி டாலராக உள்ளது. பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 21.47 கோடி டாலர் சரிந்து 180 கோடி டாலராக உள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு எவ்வித மாற்றமின்றி 2,098 கோடி டாலராக உள்ளது.

 

Leave a Reply