வணிகச் செய்திகள்

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 30,000 கோடி டாலரை தாண்டியது

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 28-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 503 கோடி டாலர் உயர்ந்து 30,367 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, மார்ச் 21-ந் தேதியுடன் முடிந்த முந்தைய வாரத்தில் 135 கோடி டாலர் அதிகரித்து 29,864 கோடி டாலராக இருந்தது. தொடர்ந்து ஐந்து வாரங்களாக அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில், பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப்பட்டுள்ள நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே, டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகளுக்கு தற்போது பலன் கிடைக்க தொடங்கியுள்ளது.

Leave a Reply