இரும்பு தாது & உலோகம்

இந்தியாவின் இரும்பு தாது ஏற்றுமதியில் 28% சரிவு!!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணிக்கும் காரணிகளுள் முக்கிய இடம் கனிமவளத்திற்கு உண்டு. அந்த வகையில் இந்தியாவில் இரும்பு கனிம வளம் முக்கியமானதாகவும், சிறப்பாகவும் காணப்படுகிறது. ஆனால் கடந்த 6 மாத காலமாக இந்திய இரும்பு ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வர்த்தக பாற்றாக்குறை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு பெரும் சவாலாக திகழ்கிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் இரும்பு தாது உற்பத்தி 28.16% குறைந்தது. அதாவது 11.17 மில்லியன் டன் குறைந்து விட்டது. தற்போது அரசு கடைபிடித்து வரும் ஒழுங்கு முறை நடவடிக்கையின் காரணமாக இரும்பு தாது துறையின் மீதான அதிருப்தி தொடர்ந்து வருகிறது. இரும்பு தாது கனிம வளத்தில் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராக விளங்கிய இந்தியா சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 15.55 மில்லியன் டன் இரும்பு தாது ஏற்றுமதி செய்தது என இந்திய கனிம தொழிற்சாலை கூட்டமைப்பு (FIMI) வெளியிட்டுள்ள புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அரசாங்கம் தனது கொள்கையை மாற்றி கொள்ளாத வரை, இரும்பு தாது ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலை நீடிக்கும் என்றும், தற்போது ஏமாற்றத்தை தந்துள்ள அதிருப்தியான நிலையிலிருந்து மீண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட போவதில்லை என்றும் இந்திய கனிம தொழிற்சாலை கூட்டமைப்பின் பொது செயலாளர் R.K ஷர்மா தெரிவித்தார்.

Leave a Reply