நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் பொருளாதார பலம் 2.05 லட்சம் கோடி டாலராக (சுமார் ரூ.125 லட்சம் கோடி) அதிகரிக்கும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதார வலிமை 3 லட்சம் கோடி டாலர் என்ற புதிய சாதனை அளவை எட்டும் என்றும் பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.கடந்த ஆண்டில்…கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 1.88 லட்சம் கோடி டாலராக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 2.05 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என பன்னாட்டு நிதியத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2019-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பொருளாதார வலிமையில் இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக இந்திய பொருளாதாரம் தொடர்பான கணிப்புகள் மாற்றம் கண்டு வருகின்றன. அதே சமயம் பெரிய அளவில் வளர்ச்சி காண வேண்டுமானால் புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.இந்தியா 10-வது இடம்கடந்த ஆண்டில் பொருளாதார வலிமையில் முன்னணி 10 நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. அந்த ஆண்டில் இந்த பட்டியலில் நம் நாடு பத்தாவது இடத்தில் இருந்தது. சர்வதேச அளவில் பொருளாதார பலத்தில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதார வலிமை 17.42 லட்சம் கோடி டாலராக உள்ளது. சீனா 10.35 லட்சம் கோடி டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.2019-ஆம் ஆண்டில் ரஷ்யா, இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விஞ்சி இந்தியா ஏழாவது இடத்திற்கு முன்னேறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 3.18 லட்சம் கோடி டாலராக இருக்கும். அதே ஆண்டில் பிரேசில் பொருளாதாரம் 2.89 லட்சம் கோடி டாலராகவும், ரஷ்யாவின் வலிமை 2.59 லட்சம் கோடி டாலராகவும், இத்தாலியின் பலம் 2.45 லட்சம் கோடி டாலராகவும் இருக்கும் என பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.அமெரிக்கா முதலிடம்2019-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் அமெரிக்கா 22.15 லட்சம் கோடி டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் முதலிடத்தில் இருக்கும். சீனா (15.52 லட்சம் கோடி டாலர்) மற்றும் ஜப்பான் (5.43 லட்சம் கோடி டாலர்) ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும். அதே ஆண்டில், ஜெர்மனியின் பொருளாதார வலிமை 4.55 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும். இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.70 லட்சம் கோடி டாலர் என்ற புதிய சாதனை அளவை எட்டும். பிரான்சின் பொருளாதாரம் 3.39 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என பன்னாட்டு நிதியம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார பலம் ரூ.125 லட்சம் கோடியாக உயரும்
October 21, 20140228

தொடர்புடைய செய்திகள்
March 7, 20140205
அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களை எட்டும்
அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களை எட்டும் என்று புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரி ஜான் எம்.மெக்காஸ்லின் கூறினார். மதுரையில் தமிழ்நாடு தொழி
Read More March 16, 20140203
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 109 கோடி டாலர் உயர்வு
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, மார்ச் 7–ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 109 கோடி டாலர் உயர்ந்து 29,545 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, பிப்ரவரி 28–ந் தேதியுடன் முடிந்த முந்தைய வாரத்தில் 95
Read More March 3, 20140184
பிப்ரவரி மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்களின் கடன்பத்திர முதலீடு ரூ.11,337 கோடி
பிப்ரவரி மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.11,337 கோடி மதிப்பிற்கு கடன்பத்திரங்களை வாங்கியுள்ளன. 2013–ஆம் ஆண்டில், இந்நிறுவனங்கள் ரூ.50,847 கோடி அளவிற்கு கடன்பத்திரங்களை விற்பனை செய்திருந்தன. சிறப்
Read More
Leave a Reply