சேவைகள் ஏற்றுமதிமென்பொருள்

இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி 15% வரை உயரும்!! நாஸ்காம்

மும்பை: வல்லரசு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு தேவை அதிகரிப்பால், இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி அடுத்த ஆண்டு சற்று வேகமான வளர்ச்சியைக் எட்டும் என தகவல் தொழில்நுட்ப வர்த்தக அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது. தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனக் கூட்டமைப்பின் (நாஸ்காம்) தகவல் படி, மென்பொருள் ஏற்றுமதி வரும் நிதியாண்டில் 15 சதவிகிதம் வரை உயர்ந்து 99 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை எட்டும் எனத் தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டின் வளர்ச்சியை விட 13 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடதக்கது. நாஸ்காம் குறிப்பிட்டுள்ள 13 முதல் 15 சதவிகித வளர்ச்சி எதிர்நோக்கானது இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற இந்தியாவின் மிக பெரும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களிந் வளர்ச்சித் தடையை சந்தித்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு அறியப்படும் அதிகப்படியான வளர்ச்சியாகும். “அமெரிக்கா தொடர்ந்து முக்கிய சந்தையாக இருந்த போதும், வரும் நிதியாண்டில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகப்பிடயான வளர்ச்சியை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது” என நாஸ்காம் தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்க குடியமர்வு விதிகளில் (IMMIGRATION BILL) விவாதிக்கப்படும் மாற்றங்களானது மென்பொருள் துறைக்கு சோதனைகளைத் தரும் என நாஸ்காம் தெரிவித்தது.

Leave a Reply