இறக்குமதி செய்திகள்

இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி பன்மடங்கு உயர்ந்தது

உலக அளவில் ராணுவ தளவாடங்கள் இறக்குமதியில் இந்தியா மிகப்பெரிய நாடாக உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி மூன்று மடங்கு அதிகமாகும். இந்த தகவலை சுவீடனை சேர்ந்த நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இரண்டு மடங்கு

2009 முதல் 2013 வரையிலான 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுதங்கள் இறக்குமதி அதற்கு முந்தைய ஐந்தாண்டைக் (2004-08) காட்டிலும் 111 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் சர்வதேச அளவில் ராணுவ தளவாடங்கள் இறக்குமதியில் நம் நாட்டின் பங்கு 7 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. நம் நாட்டின் மொத்த ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது.

அமெரிக்கா

அடுத்தபடியாக ஏழு சதவீத பங்களிப்புடன் முதல் முறையாக அமெரிக்கா இரண்டாவது பெரிய சப்ளையராக உருவெடுத்துள்ளது.

ராணுவ தளவாடங்கள் இறக்குமதி அதிகரிப்பால் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயரும். எனவே, நம் நாடு ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலே தயாரிக்கும் வகையில் ஆலைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து தற்போது உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரிப்பை மேம்படுத்தும் வகையில் சில கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply