பொருள் வணிகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆலிவ் சுத்திகரிப்பு ஆலையை துவங்கும் ராஜஸ்தான்

இந்தியாவிலேயே முதல் முறையாக ஆலிவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை துவங்கியிருக்கிறது ராஜஸ்தான் மாநிலம். பிகானர் மாவட்டத்தில் உள்ள  லன்கரன்சர் பகுதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஆலிவ் ஆயில் சுத்திகரிப்பு ஆலையை இன்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே திறந்து வைத்தார். இந்த ஆலையில் இருந்து இந்தியாவிலேயே முதல் முறையாக ஆலிவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை துவங்கியிருக்கிறது ராஜஸ்தான் மாநிலம். பிகானர் மாவட்டத்தில் உள்ள  லன்கரன்சர் பகுதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஆலிவ் ஆயில் சுத்திகரிப்பு ஆலையை இன்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே திறந்து வைத்தார். இந்த ஆலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ‘ராஜ் ஆலிவ் ஆயில்’ என்ற பிராண்டுடன் விரைவில் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.

மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிகமாக காணப்படும் ஆலிவ் மரங்களிலிருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. பல 100 ஆண்டுகள் வாழும் இந்த மரங்களின் வேர்கள் ஆழமாகவும் பரந்து விரிந்தும் இருப்பதால் தண்ணீர் குறைந்த இடங்களிலும், கடற்பகுதியிலும் செழித்து வளருகின்றன. ஆலிவ் ஆயில் உற்பத்தியில் உலக அளவில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, கிரீஸ் நாடுகளை அடுத்து இப்போது ஆஸ்திரேலியாவும் ஆலிவ் ஆயிலை உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், 2007 ஆம் ஆண்டு முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான ஆட்சியின் போது இஸ்ரேல் நாட்டின் உதவியுடன் 7 இடங்களில் ஆலிவ் மரங்கள் சாகுபடி துவங்கப்பட்டது. 282 ஏக்கர்கள் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் இப்போது அதை 5000 ஏக்கர்களாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் ஆலிவ் தேவையை ராஜஸ்தான் விரைவில் பூர்த்தி செய்யும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

வெறும் சமையல் பொருளாக மட்டுமில்லாமல், இந்த எண்ணெய் மருத்துவ குணமுடையதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply