வணிகச் செய்திகள்

இந்தியாவில் உள்ள கேர்ரேபோர் நிறுவனம் மூடப்படுகிறது

(டி.என்.எஸ்) சில்லறை வர்த்தகத்தில் அந்நீய முதலீட்டிற்கு அனுமதியில்லை என்ற மத்திய அரசின் முடிவால், இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரான்ஸ் நாட்டைச் கேர்ரேபோர் நிறுவனம் மூடப்படுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் அந்நிறுவனத்தின் ஐந்து மையங்களையும் மூட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் தங்களது இந்திய விற்பனை மையங்களை மூடப்போவதாக அந்த நிறுவனம் தங்களது வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (டி.என்.எஸ்)

Leave a Reply