வணிகச் செய்திகள்

இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் 40 ஜப்பான் நிறுவனங்கள்

இந்தியாவில் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில் 40 ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்று வந்தார். அங்கு நடந்த தொழில் அதிபர்கள் மாநாட்டில் பிரதமர் பேசிய போது, இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் என்றார்.

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை அறிவதில் ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

கட்டுமானப் பொருட்கள், மின்சாரம் போன்ற துறைகளில் நடுத்தர முதலீட்டாளர்கள் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Leave a Reply