வணிகச் செய்திகள்

இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்க திட்டம்

இந்தியாவும், ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. 2012–13–ஆம் நிதி ஆண்டில் இந்த வர்த்தகம் 652 கோடி டாலராக இருந்தது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் ரஷ்ய துணை பிரதமர் டீமெர்டி ரோகோசின் கலந்து கொண்ட கூட்டத்தில், தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய இருநாட்டு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இருநாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. இந்திய–ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகும் ஹெலிகாப்டர் மற்றும் விமான தயாரிப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

Leave a Reply