ஏற்றுமதி செய்திகள்

இந்திய ஏற்றுமதிகள் அதிகரிப்பு

ஜனவரி மாதத்தில் இந்திய ஏற்றுமதிகள் 3.79 சதவீத அளவுக்கு அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து புது தில்லியில் மத்திய வர்த்தகத் துறைச் செயலர் ராஜீவ் கேர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து சுமார் ரூ. 1.65 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி (26.75 பில்லியன் அமெரிக்க டாலர்) நடைபெற்றிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரையிலான கால அளவில் ஏற்றுமதி 5.71 சதவீத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்த பத்து மாதங்களில் இந்திய ஏற்றுமதிகளின் மதிப்பு சுமார் ரூ. 16 லட்சம் கோடியாகும் (257 பில்லியன் அமெரிக்க டாலர்). தற்போதைய நிலையில், வர்த்தகப் பற்றாக்குறை மதிப்பு சுமார் ரூ. 61,500 கோடியாக உள்ளது.

இதே விகிதத்தில் ஏற்றுமதிகள் தொடருமானால், இந்த ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்கை எட்டிவிடுவது உறுதி. நடப்பு நிதி ஆண்டில் 325 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 20 லட்சம் கோடி) மதிப்பிலான ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி மாதத்தில் இறக்குமதிகளின் மதிப்பு 18 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தங்கம், வெள்ளி இறக்குமதியுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டு ஜனவரியில் இவற்றின் இறக்குமதி 77 சதவீதம் குறைந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply