மருந்து பொருட்கள்

இந்திய நிறுவனங்களின் மருந்து ஏற்றுமதிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் தடை

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் கலப்படமானவை என்ற கருத்து சமீபகாலமாக அமெரிக்க மருத்துவர்களிடையே அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ரான்பேக்ஸி, சன் ஃபார்மா போன்ற இந்திய நிறுவனங்களின் மருந்து ஏற்றுமதிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்து வருகிறது. விதிமுறைகளை மீறுவதோடு மருந்துகளின் தரத்தை பின்பற்றவதை இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து தவறி வருவதாக அமெரிக்க அரசு தரப்பில் கூறப்பட்டுவருகிறது. இதனால் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் மாத்திரைகளில் இந்திய நிறுவனங்களின் மாத்திரை தயாரிப்புகளை தவிர்க்கும் நெருக்கடிக்கு அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் ஏற்றமதி சரிவை சந்திக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

 

நன்றி தினகரன்

Leave a Reply