ஏற்றுமதி செய்திகள்

இந்திய பீடிகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பீடிகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்திலுள்ள ஜாஷ் நிறுவனம் ‘சுத்ரா’ என்ற பெயரில் நான்கு வகையான பீடிகளை தயாரித்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த பீடி வகைகள் அமெரிக்க புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டி நடைமுறைகளுக்கு ஏற்ற முறையில் இல்லை என குற்றம்சாட்டி சுத்ரா பீடிகளை அமெரிக்காவில் இறக்குமதி செய்யவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என அமெரிக்கா புகையிலை கட்டுப்பாட்டு சட்டம் தடை விதித்துள்ளது.

ஒழுங்கு முறை தரத்தை முறையாக பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி இந்திய பீடிகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பது இதுவே முதல் முறை.

Leave a Reply