செய்திகள்வணிகச் செய்திகள்

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 4ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.66.63-ஆக இருந்தது.

உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்ததாலும், பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.66.42-ஆக இருந்தது.

Leave a Reply