வேளாண் பொருட்கள்

இந்திய வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 19% சரிவு

2013 – 2014-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 19% சரிவை சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் விளைவிக்கப்படும் அரிசி, கோதுமை, வெள்ளம், பால், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் எருமை இறைச்சி ஆகியவை வேளாண்துறை பொருட்களாக பட்டியலிடப்படுகின்றன. இவை அன்டைய நாடுகளான வங்கதேசம், பாக்கிஸ்தான் மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி சந்தை 19% சரிவை சந்தித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி முந்தைய நிதி ஆண்டின் காலாத்தில் ரூ.39,000 கோடியாக இருந்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.32,500 கோடியாக குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 59% சரிவடைந்து ரூ.5,135 கோடியாக உள்ளது.

அமெரிக்காவில் இந்திய வேளாண் பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதே போன்று இந்திய ஏற்றுமதி சந்தையில் 2-ம் இடம் வகிக்கும் வங்கதேசத்திற்கான ஏற்றுமதியும் 66% சரிவடைந்து ரூ.520 கோடியாக உள்ளது. வெள்ளம் மற்றும் அது சார்ந்த இனிப்பு பொருட்களின் உற்பத்தி சரிவடைந்ததே இதற்கு காரணம் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் ஈரானுக்கான இந்திய அரிசி ஏற்றுமதி 140% அதிகரித்துள்ளது. இந்தியாவில் விளைவிக்கப்படும் பாசுமதி ரகத்திற்கு இந்நாட்டில் அதிக வரவேற்பு காணப்படுவதே இதற்கான காரணமாகும். எருமை இறைச்சி ஏற்றுமதியும் 20% அதிகரித்துள்ளதாக அரசு கூறியுள்ளது.

Leave a Reply