வணிகச் செய்திகள்

இந்த ஆண்டில் வெளிநாட்டிலிருந்து வந்த தொகை ரூ.4.47 லட்சம் கோடி

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு பணத்தை அனுப்புகின்றனர். இதேபோல், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கான தொகை வர்த்தகர்களுக்கு வருகிறது. இந்த வகையில், இந்த ஆண்டில் வெளிநாட்டில் இருந்து ரூ.4,47,300 கோடி இந்தியாவுக்கு வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட தொகையை அதிகளவு பெற்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இத்தொகையானது, கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டு தொகையின் மூன்று மடங்கில் சிறிது மட்டும்தான் குறைவாகும்.
மேலும், நடப்பு ஆண்டில் வளரும் நாடுகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட தொகையை ஒப்பிடுகையில் இந்தியாவும், சீனாவும் மட்டுமே 3 மடங்கை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply