இரும்பு தாது & உலோகம்

இரும்புத்தாது ஏற்றுமதி வரி குறித்து விரைவில் முடிவு

இரும்புத்தாது மீதான ஏற்றுமதி வரியை ரத்து செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.பரிசீலனைஉள்நாட்டு நிறுவனங்களின் நலன் கருதி இரும்புத்தாது ஏற்றுமதி மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கனிமவள நிறுவனங்கள் சங்கம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பரிசீலனை செய்வதற்காக மத்திய நிதி அமைச்சகம் விரைவில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இரும்புத்தாதுவிற்கு 30 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை ரத்து செய்ய இந்திய கனிம நிறுவனங்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இரும்புத்தாது ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆகஸ்டு மாதத்தில், ஏற்றுமதி 61 சதவீதம் குறைந்து 5.20 கோடி டன்னாக குறைந்துள்ளது. உருக்கு தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக உள்ள இரும்புத்தாது ஏற்றுமதி குறைந்து கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் 10 கோடி டன்னாக இருந்த ஏற்றுமதி படிப்படியாக குறைந்து 2011-12-ல் 6.20 கோடி டன்னாகவும், 2012-13-ல் 1.84 கோடி டன்னாகவும், கடந்த நிதி ஆண்டில் 1.44 கோடி டன்னாகவும் குறைந்துள்ளது. ஏற்றுமதி வரி அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி குறைந்துள்ளது. இரும்புத்தாது உற்பத்தியும் குறைந்துள்ளது. உள்நாட்டில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 21.32 கோடி டன்னாக இருந்த உற்பத்தி 2013-14-ஆம் நிதி ஆண்டில் 12.90 கோடி டன்னாக குறைந்தது. தேக்கம்சுமார் 6.20 கோடி டன் அளவு இரும்புத்தாது பயனற்ற நிலையில் சுரங்க வாயில்களில் தேங்கி உள்ளதாக கனிமவள நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply