இரும்பு தாது & உலோகம்

இரும்புத் தாது ஏற்றுமதியில் முறைகேடு: சென்னை உள்பட 24 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

சென்னை: கர்நாடகாவின் பெலிகிரி துறைமுகத்தில் இருந்து சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்புத் தாது, சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சென்னை, சேலம் உட்பட 24 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் உள்ள 18 நிறுவனங்கள், மகாராஷ்டிரா, கோவா, ஹரியானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு நிறுவனம் என மொத்தம் 24 இடங்களில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஒரே நேரத்தில் 15 குழுக்களாக பிரிந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய இந்தச் சோதனையில், 270 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள தனியார் காபி தூள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டிலும், சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

கடந்த 2009-10ஆம் ஆண்டுகளில், சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 77 லட்சம் டன் இரும்புத்தாது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ. தரப்பில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply