இறக்குமதி செய்திகள்தங்கம் & ஆபரணங்கள்

இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளியின் விலையை சர்வதேச சந்தை  நிலவரம் மற்றும்  அன்னிய செலாவணியின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு  மாற்றி வருகிறது. இதன்  அடிப்படையில்தான் சுங்கவரி விதிக்கப்படுகிறது. இதன்படி,  இறக்குமதியாகும் தங்கத்தின் மதிப்பை 10  கிராமுக்கு 421 அமெரிக்க டாலராகவும்,  வெள்ளி ஒரு கிலோவுக்கு 663 அமெரிக்க டாலராகவும் உயர்த் தியுள்ளது. இதற்கு முன்பு  தங்கத்தின் இறக்குமதி மதிப்பு 10 கிராமுக்கு 404 அமெரிக்க டாலராகவும்,  வெள்ளி  கிலோவுக்கு 635 அமெரிக்க டாலராகவும் இருந்தது.

இறக்குமதியில் பெட்ரோலியத்துக்கு அடுத்து  2வது இடத்தில் தங்கம் உள்ளது. தங்கம்  இறக்குமதியில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த  நிதியாண்டில் 845 டன்னாக  இருந்த தங்கம் இறக்குமதி, நடப்பு நிதியாண்டில் 500 டன்னாக குறைய  வாய்ப்பு  உள்ளதாக நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply