இறக்குமதி செய்திகள்

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரிப்பு

சென்ற ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது, ஜனவரி மாதத்தில் ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, டிசம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 1.89 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டன. இது ஜனவரி மாதத்தில் 118 சதவீதம் அதிகரித்து 4.12 லட்சம் பீப்பாயாக உயர்ந்துள்ளது.

அணு ஆயுதங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. 2012 பிப்ரவரி மாதத்திற்குப் பின் இந்த ஆண்டு ஜனவரியில்தான் ஈரானிய கச்சா எண்ணெய் அதிகரித்துள்ளது. மேலும் 2012 மார்ச் மாதத்திற்குப் பின் இந்தியாவின் இரண்டாவது முக்கிய எண்ணெய் சப்ளையராக ஈரான் உருவெடுத்துள்ளது.

எனினும் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் ஈரானிய எண்ணெய் இறக்குமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை விட 26 சதவீதம் குறைந்து நாள் ஒன்றுக்கு 2.01 லட்சம் பீப்பாய்களாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் அங்கிருந்து நாள் ஒன்றுக்கு 2.20 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆக, கணக்கீட்டுக் காலத்தில் இலக்கை விட இறக்குமதி குறைந்துள்ளது.

Leave a Reply