ஜனவரி மாதத்தில் எஸ்ஸார் நிறுவனத்தின் ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி 82 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற மாதத்தில் இந்நிறுவனம் ஈரான் நாட்டிலிருந்து நாள் ஒன்றுக்கு 1.42 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் 54,200 பீப்பாய்களாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் (ஏப்ரல்–ஜனவரி) நாள் ஒன்றுக்கு 91,500 பீப்பாய்களை இறக்குமதி செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும்.
அணு ஆயுதங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக கூறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தன. எனினும், அண்மையில் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக அந்நாட்டின் மீதான பொருளாதார தடை சற்றே தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவின் ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜனவரி மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
Leave a Reply