பொருள் வணிகம்

உருளைக்கிழங்கிற்கு தட்டுப்பாடு ஆக்ராவில் கொள்முதல் செய்து சமாளிப்பு

தமிழகத்தில், உருளைக்கிழங்கிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், வியாபாரிகள், ஆக்ராவில் இருந்து கொள்முதல் செய்து, தேவையை சமாளித்து வருகின்றனர்.

தமிழகத்தின், பெரும்பாலான காய்கறி சந்தைகளுக்கு தேவையான, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கோஸ் போன்றவை, மலை கிராமங்களில் இருந்து வரவழைக்கப் படுகின்றன.

தற்போது, மலை பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால், காய்கறி சாகுபடி குறைந்துள்ளது.இதனால், தமிழகத்தில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருந்து, உருளைக்கிழங்கை வரவழைத்து, வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, வத்தலக்குண்டு வியாபாரி, சீனா கூறியதாவது:கொடைக்கானல் உருளைக் கிழங்கு கிடைக்காததால், ஆக்ராவிலிருந்து வரவழைத்து உள்ளோம். வழக்கமாக கொடைக்கானலில் தட்டுப்பாடு ஏற்படும் போது, பெங்களூருவில் இருந்து கிழங்கு கொள்முதல் செய்யப்படும்.

தற்போது, அங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆக்ராவில் இருந்து வரவழைத்து உள்ளோம். போக்குவரத்து செலவை கணக்கிட்டு, கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply