பொருள் வணிகம்

உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஒடிசா அரசு தீவிரம்

ஒடிசா மாநிலத்தில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் தரமான விதைகளை கொள்முதல் செய்திட தேசிய விதைகள் கழகத்துடன் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதன்படி, 50 ஆயிரம் குவிண்டால் உருளைக்கிழங்கு விதையும், 1,500 குவிண்டால் வெங்காய விதையும் தேசிய விதைகள் கழகத்திடம் இருந்து பெறப்பட்டு நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் பிரதீப்மகாரதி தெரிவித்தார்.

தற்போது, ஆண்டுக்கு 10.5 லட்சம் டன் உருளைக் கிழங்கு தேவை இருக்கிறது. ஆனால், இன்றைய நிலவரப்படி 2.5 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, பற்றாக்குறையை ஈடு செய்து அதிகளவில் உற்பத்தியை பெருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி அதன் மூலம் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பிரதீப் சுட்டிகாட்டினார்