காய் கறிகள் & பழங்கள்

உருளைக் கிழங்குக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம்

உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்யவேண்டும் என்றால் குறைந்தபட்ச விலை டன்னுக்கு 450 டாலர் கிடைத்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்று மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. உருளைக் கிழங்குக்கு உள்நாட்டில் தேவை அதிகமாக இருப்பதால், அதனுடைய விலையைக் குறைப் பதற்காக மத்திய அரசு இந்த முடிவவை எடுத்திருக்கிறது.

மேலும் காலநிலை மாற்றங் களால் நடப்பு ஆண்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் 13 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலத்தில் புதுடெல் லியில் உருளைக் கிழங்கின் விலை 25-30 சதவீதம் அதிகரித்து விட்டது. மேற்கு வங்காள அரசு வரும் ஜூலை 8-ம் தேதி முதல் உருளைக்கிழங்கை மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய தடைவிதித்திருக்கிறது.

2013-14-ம் ஆண்டில் 2.2 லட்சம் டன் உருளை ஏற்றுமதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 1.6 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக வெங் காயத்தின் குறைந்தபட்ச விலை யையும் டன்னுக்கு 300 டாலராக மத்திய அரசு நிர்ணயம் செய்தது குறிப்பிடத்தகக்து.

Leave a Reply