இறக்குமதி செய்திகள்

உற்பத்தி குறைந்ததால் இயற்கை ரப்பர் இறக்குமதி 91 சதவீதம் அதிகரிப்பு

உற்பத்தி குறைந்தது மற்றும் தேவைப்பாடு அதிகரித்ததன் காரணமாக இயற்கை ரப்பர் இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் 91 சதவீதம் அதிகரித்து 18,141 டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 9,497 டன்னாக இருந்தது. ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மூலம் இது தெரியவந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் இயற்கை ரப்பர் உற்பத்தி 62,000 டன்னிலிருந்து 60,000 டன்னாக குறைந்துள்ளது. அதே சமயம், பயன்பாடு 74,175 டன்னிலிருந்து 78,000 டன்னாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்-பிப்ரவரி) இயற்கை ரப்பர் இறக்குமதி 44 சதவீதம் அதிகரித்து 2.07 லட்சம் டன்னிலிருந்து 2.99 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. எனினும் உள்நாட்டில் தேவை அதிகமாக உள்ளதால் இறக்குமதியும் அதிகமாக உள்ளது. பொதுவாக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply