வணிகச் செய்திகள்

உலக வங்கி மதிப்பீடு-இந்திய பொருளாதாரம் 5.6% வளர்ச்சி அடையும்

நடப்பு நிதி ஆண்டில் (2014-15), இந்திய பொருளாதாரத்தில் 5.6 சதவீத வளர்ச்சி ஏற்படும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பில் மத்திய அரசு சீர்திருத்தங்களை அமல்படுத்தும் பட்சத்தில் உற்பத்தி துறை உத்வேகம் பெறும். இதன் காரணமாக 5.6 சதவீத வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான சரக்குகள் மற்றும் சேவை வரிகளை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தேவையற்ற வரி விதிப்புகள் நீங்கி நீண்ட கால வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படும் என அந்த வங்கி கூறியுள்ளது.

2015-16-ஆம் நிதி ஆண்டில் 6.4 சதவீத வளர்ச்சியும், 2016-17-ஆம் நிதி ஆண்டில் 7 சதவீத வளர்ச்சியும் ஏற்படும் என உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தியாகும் அனைத்து வகையான பொருள்கள், வேளாண் விளைபொருள்கள் மற்றும் அளிக்கப்படும் சேவைகளின் மொத்த சந்தை மதிப்பு அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) ஆகும். இதில் ஏற்படும் முன்னேற்றமே பொருளாதார வளர்ச்சி ஆகும்.

Leave a Reply