இறக்குமதி செய்திகள்

உள்நாட்டில் உற்பத்தி சரிவு சோயா எண்ணெய் இறக்குமதி உயரும்

உள்நாட்டில் உற்பத்தி சரிவடைந்துள்ளதால் நடப்பு பருவத்தில் (2013 நவம்பர்  –  2014 அக்டோபர்) சோயா எண்ணெய் இறக்குமதி 15 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து மார்ச் மாதம் வரை சோயா எண்ணெய் இறக்குமதி 112 சதவீதம் உயர்ந்து 5.28 லட்சம் டன்னை தாண்டியுள்ளது. அதே சமயம் ஒட்டுமொத்த அளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி 5.4 சதவீதம் குறைந்து 42.50 லட்சம் டன்னாக உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் சோயா எண்ணெய் இறக்குமதி 10 லட்சம் டன்னாக இருக்கும் என தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ரபி பருவ மதிப்பீட்டின்படி 2013 – 14 எண்ணெய் பருவத்தில் அரவைக்காக 8.98 லட்சம் டன் சோயாபீன் கிடைக்கும் என தெரிகிறது. எனினும் கடந்த பருவத்தில் கிடைத்த சோயாபீன் 9.70 லட்சம் டன்னாக இருந்தது. மத்திய அரசின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நடப்பு பருவத்தில் சோயாபீன் உற்பத்தி 1.25 கோடி டன்னாக குறைய உள்ளது. கடந்த பருவத்தில் உற்பத்தி 1.47 கோடி டன்னாக இருந்தது. ஆக, இப்போது 15 சதவீத அளவிற்கு உற்பத்தி சரிவடையும் நிலை உள்ளது.

Leave a Reply