இறக்குமதி செய்திகள்

எண்ணெய் இறக்குமதி 40% சரிவு

இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதி 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 40% குறைந்துள்ளது. இந்தியாவில் எண்ணெய் தேவையில் 60% இறக்குமதி மூலமே பெறப்படுகிறது. அதிலும் சமையல் எண்ணெய்யில் 80% பாமாயில் இறக்குமதி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவு கடந்தாண்டு பிப்ரவரியில் 9.69 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால், கடந்த மாதம் 40% குறைந்து 5.78 லட்சம் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பாமாயில் இறக்குமதி குறைந்ததே இதற்கு கார ணம் என எஸ்இஏ அமைப்பு தெரிவித்துள்ளது.

 

நன்றி தினகரன்

Leave a Reply