செய்திகள்பொருள் வணிகம்

எண்ணெய் ஏற்றுமதியில் ஈரான் சாதனை

crude oil, export news, tamil export

டெகரான் – ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதை அடுத்து ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு 20 லட்சம் பாரல்கள்கள் அளவுக்கு அதிகரித்து புதிய மைல்க்கல்லை எட்டியுள்ளது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 25 லட்சம் பாரல்களை அவர்கள் ஏற்றுமதி செய்தனர். அந்த எல்லையை அடையும் வரை ஈரான் தமது எண்ணெய் ஏற்றுமதியை தொடர்ந்து அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் உற்பத்தி தேவைக்கு அதிகமாக உள்ளதால் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

Leave a Reply