இறக்குமதி செய்திகள்

எதிர்வரும் சந்தை பருவத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.30 கோடி டன்னாக அதிகரிக்கும்

எதிர்வரும் சந்தை பருவத்தில் (2014 நவம்பர் – 2015 அக்டோபர்) சமையல் எண்ணெய் இறக்குமதி 1.30 கோடி டன்னாக அதிகரிக்கும் என இந்த துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.பாமாயில்“அக்டோபர் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு எண்ணெய் பருவத்தில் 1.16 கோடி டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாமாயில் 80 லட்சம் டன்னாக இருக்கும். கடந்த 2012-13 சந்தைப் பருவத்தில் அதிகபட்சமாக 1.04 கோடி டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, பருவமழை குறைவால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால், அடுத்த பருவத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி கணிசமாக அதிகரிக்கும். தனிநபர் எண்ணெய் நுகர்வு ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரித்து வருகிறது. மக்கள்தொகையும் 2.20 கோடி உயர்ந்து கொண்டிருக்கிறது” என இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார். எண்ணெய் வித்துக்கள்பருவமழை குறைவால் சோயாபீன், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு 11 சதவீதம் குறைந்துள்ளது. 2014-15 சந்தைப் பருவத்தில் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் அளவு 90 லட்சம் டன்னுக்கு மேல் இருக்கும் என ருச்சி சோயா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தினேஷ் ஷாரா தெரிவித்தார்.நம் நாட்டில் ஆண்டுக்கு 1.90 கோடி டன் சமையல் எண்ணெய் நுகரப்படுகிறது. இதில் பாமாயிலின் பங்கு 80 சதவீதமாகும். உலக அளவில் பாமாயில் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் முறையே லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. இந்தியா தனது மொத்த சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகத்தான் பூர்த்தி செய்கிறது.அக்டோபர் மாதத்துடன் நிறைவடையும் பருவத்தில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவிற்கு 15.50 லட்சம் டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவது, உடல் நலம் குறித்து அதிகரித்து வரும் விழிப்புணர்வு காரணமாக சூரியகாந்தி எண்ணெய் பயன்பாடு அதிகரித்து வருவதே இறக்குமதி அதிகரிப்பிற்கு பின்னணியாக அமைந்துள்ளது. அடுத்த பருவத்தில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 16.50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என தினேஷ் ஷாரா தெரிவித்துள்ளார்.பண்டிகை காலம்ஆகஸ்டு நிலவரப்படி, இறக்குமதியாகும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கும், கச்சா பாமாயில் எண்ணெய்க்கும் இடையிலான விலை வித்தியாசம் 95 டாலராக (ஒரு டன்னுக்கு) உள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 262 டாலராக இருந்தது. இதனால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கலாம். பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆகஸ்டு-அக்டோபர் மாத காலத்தில் சமையல் எண்ணெய் நுகர்வு அதிகரிக்கும். எனவே சமையல் எண்ணெய் இறக்குமதியும் அதிகரிக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply