இறக்குமதி செய்திகள்

எதிர்வரும் 2014-5-ஆம் நிதி ஆண்டில் 1.50 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்ய என்.டி.பி.சி. நிறுவனம் திட்டம்

முன்னணி மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., எதிர்வரும் 2014-15-ஆம் நிதி ஆண்டில் 1.50 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

‘‘அனல் மின் உற்பத்திக்கு நிலக்கரி முக்கிய எரிபொருளாக உள்ளது. நிலக்கரி தேவைப்பாட்டிற்கு கோல் இந்தியா நிறுவனத்தை சார்ந்து உள்ளோம். கோல் இந்தியா நிறுவனம் சப்ளையை அதிகரித்தால் இறக்குமதி இலக்கை குறைப்போம்’’ என என்.டி.பி.சி. நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருப் ராய் சவுத்ரி தெரிவித்தார்.

என்.டி.பி.சி. நிறுவனத்தின் தற்போதைய நிறுவு திறன் 42,964 மெகா வாட்டாக உள்ளது. இதில், நிலக்கரியை எரிபொருளாக கொண்ட மின் நிறுவு திறன் 37,000 மெகா வாட்டுக்கும் அதிகமாகும். நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள் (2012-17) கூடுதலாக 14,000 மெகா வாட் அளவிற்கு நிறுவு திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply