ஏற்றுமதி செய்திகள்

ஏப்ரலில், வர்த்தக பற்றாக்குறை 1,009 கோடி டாலராக குறைந்தது ஏற்றுமதி 5 சதவீதம் உயர்வு

நடப்பு 2014 – 15 – ஆம் நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை 1,009 கோடி டாலராக குறைந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 1,051 கோடி டாலராக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது வர்த்தக பற்றாக்குறை 4 சதவீதம் குறைந்துள்ளது. ஏற்றுமதி உயர்ந்து, இறக்குமதி குறைந்ததே இதற்கு காரணமாகும்.

தொடர்ந்து இரண்டாவது மாதமாக மார்ச்சில் ஏற்றுமதி குறைந்து இருந்தது. ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி 5.26 சதவீதம் உயர்ந்து 2,563 கோடி டாலராக அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும் பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 15 சதவீதம் குறைந்து 3,572 கோடி டாலராக குறைந்துள்ளது.

Leave a Reply