மீன் & கடல் பொருட்கள்

ஏப்ரல்-ஜூலை மாத காலத்தில்-கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரிப்பு

நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல் – ஜூலை) கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி அளவு அடிப்படையில் 2.41 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. மதிப்பு அடிப்படையில் 29 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.9,345 கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைத்ததே இதற்கு காரணமாகும். வண்ணமெய் இறால்ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் வண்ணமெய் இறால்கள் அதிக வருவாய் அளித்துள்ளன. மொத்த கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பதப்படுத்திய இறால்களின் பங்கு 78 சதவீதமாக உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் 71 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதி சிறப்பாக இருந்தது.மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவிலிருந்து அதிக அளவு கடல் உணவு பொருள்களை இறக்குமதி செய்துள்ளன. குறிப்பாக எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் பெருமளவு இறக்குமதி செய்துள்ளன. சவூதி அரேபியாவில் வெள்ளை இறால் வளர்ப்பு திட்டம் தோல்வி அடைந்ததே இதற்கு காரணம் என முன்னணி இறால் பண்ணையாளர் ஒருவர் தெரிவித்தார்.சர்வதேச சந்தையில் இறால் தேவைப்பாடு அதிகரித்து வருவது மற்றும் நல்ல விலை கிடைப்பது போன்ற காரணங்களால் இந்திய மீன் பண்ணைகள் இறால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சென்ற ஆண்டில் 3 லட்சம் டன் அளவிற்கு உற்பத்தி இருந்தது. நடப்பு ஆண்டில் தேவைப்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் 25 ஆயிரம் டன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என இந்திய இறால் வளர்ப்பு சங்கம் தெரிவித்துள்ளது.மீன் வளர்ப்புதமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இறால் வளர்ப்பு தொழில் வளமாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் இத்தொழில் வேகமாக முன்னேறி வருகிறது.மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. ‘பிளாக் டைகர்’ இறால்கள், நன்னீர் இறால்கள், ஊசி கணவாய், சூரை மீன்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 8,000 கிலோ மீட்டர் நீள கடற்கரை உள்ளது. எனினும் மீன்பிடிப்பதற்கான இயற்கை வளங்கள் முழு அளவில் பயன்படுத்தப்படவில்லை.

Leave a Reply