வணிகச் செய்திகள்

ஏப்ரல்-டிசம்பர் மாத காலத்தில் சேவைத்துறையில் அன்னிய நேரடி முதலீடு 60 சதவீதம் சரிவு

சேவைத்துறையில் அன்னிய நேரடி முதலீடு நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பர்) 60 சதவீதம் சரிந்து 159 கோடி டாலராக குறைந்துள்ளது என தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 404 கோடி டாலராக இருந்தது. தேர்தலுக்கு பிறகு முதலீடு மேற்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இருப்பதே இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. வங்கி, காப்பீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூரியர், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகள் சேவைத்துறையில் அடங்கும்.

உருக்கு துறை

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அன்னிய நேரடி முதலீடு ஒட்டு மொத்தத்தில் 3 சதவீதம் குறைந்து 2,278 கோடி டாலரிலிருந்து 2,200 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. கட்டுமானம் மேம்பாடு, உருக்கு துறை, ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையில் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடு குறைந்துள்ளது.

ஒரு நாட்டின் தங்கு தடையற்ற பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்க வேண்டும். நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1 லட்சம் கோடி டாலர் தேவைப்படுகிறது. எனவே அன்னிய முதலீடு மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு டாலரில் தான் கட்டணம் செலுத்தப்படுகிறது. எனவே நமக்கு அதிகளவில் டாலர் தேவைப்படுகிறது. அன்னிய முதலீடு மற்றும் ஏற்றுமதி வருவாய் மூலம் நமக்கு டாலர் கிடைக்கிறது. இந்நிலையில் அன்னிய முதலீடு குறைந்தால் அது இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவடையும்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply